தமிழ்நாடு

tamil nadu

16 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல்!

By

Published : Mar 1, 2020, 8:22 PM IST

நாகை: உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வந்த 16 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் உத்தரவிட்டுள்ளார்.

16 RO plants got sealed in Nagai
16 RO plants got sealed in Nagai

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி நாகை மாவட்டம் முழுவதும் முறையாக அங்கீகாரம் பெறாமல் இயங்கிவரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளிலுள்ள 16 இடங்களில் தஞ்சாவூர் பொதுப்பணித்துறை நிலநீர் கோட்ட செயற்பொறியாளர் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் உரிய அனுமதி பெறாமல் வியாபார நோக்கத்திற்காக சில நிறுவனங்கள் நிலத்தடிநீரை சட்டவிரோதமாக உறிஞ்சி வருவது தெரியவந்தது. இது குறித்து இந்த 16 நிறுவனங்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டது.

நாகையில் 16 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல்

தொடர்ந்து நிறுவனங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டபோதும், அவை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை எனக்கூறி நாகை, வேளாங்கண்ணி, திருமருகல், வேதாரண்யம் ,சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் செயல்பட்ட 16 நிறுவனங்களுக்கு சீல் வைக்க நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர் உத்தரவிட்டார்.

ஒரே சமயத்தில் 16 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தீச்சட்டி ஏந்தியும், முதுகில் வேல் குத்தியும் திராவிடர் கழகம் 'பகுத்தறிவு' பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details