நாகப்பட்டினம்:நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த புலியூர் மேலத் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமான காலனி வீட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேகரின் தம்பி மகன் அஜிஸ் மற்றும் அவரது நண்பர்கள் நரேஷ் வெற்றிவேல் லிவின் ராஜ் ஆகியோர் தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக காலனி வீட்டின் சிமெண்ட் மேற்கூரை திடீரென இடிந்து சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் நான்கு சிறுவர்களும் வீட்டின் உள்பகுதியில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்த நான்கு சிறுவர்களையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.