தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

14 வயது சிறுமி வழக்கு; சிபிசிஜடிக்கு மாற்ற கோரிக்கை! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மயிலாடுதுறை: 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Protest
Protest

By

Published : Aug 18, 2020, 9:52 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வரதம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு ஜூலை 17ஆம் தேதி அரசு மருத்துவமனையில் பெண்குழந்தை பிறந்தது.

இது குறித்து மருத்துவ நிர்வாகம் சார்பில் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், சிறுமியின் சகோதரி கணவர், அவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சிறுமியைத் தொடர்ச்சியாகச் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்குச் சிறுமியின் தாயே உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தாய் மற்றும் சகோதரி கணவர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மற்ற குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும், இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறை விசாரணைக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்ட செயலாளர் மேகநாதன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.

இதையும் படிங்க:14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கிராம பஞ்சாயத்து உறுப்பினருக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details