மயிலாடுதுறை: மயிலாடுதுறையின் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் மதன்மோகன் (71). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவரது மனைவி மீனாட்சியம்மாள் (61). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் 27ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
தன்னுடைய கடின காலத்திலும், மகிழ்ச்சியான நாள்களிலும் உடனிருந்த மனைவியின் மறைவை, மதன்மோகனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இதனையடுத்து அவரது நினைவைப் போற்றும் வகையில், தனது மனைவி, தாயின் சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்து வீட்டின் முன்பு கோயில் ஒன்றைக் கட்டினார் மதன்மோகன்.