மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், வாக்காளர்கள் நூறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த ஏழு கல்லூரிகளில் பயிலும், சுமார் நூறு மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சைக்கிளில் சென்றனர்.