தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் நூற்றுக்கணக்கான மாடுகளுக்கு பூஜை...!

மாட்டுப்பொங்கல் இன்று (ஜனவரி 15) கொண்டாடப்பட்டுவரும் நிலையில், மாயிலாடுதுறையில் உள்ள கோசாலை ஒன்றில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற மாடுகளுக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

கோசாலையில் நூற்றுக்கணக்கான மாடுகளுக்கு பூஜை
கோசாலையில் நூற்றுக்கணக்கான மாடுகளுக்கு பூஜை

By

Published : Jan 15, 2022, 3:20 PM IST

Updated : Jan 15, 2022, 3:54 PM IST

மயிலாடுதுறை:மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாணாதிராஜபுரம் கோசாலையில் நூற்றுக்கணக்கான ஆதரவற்ற மாடுகளுக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுவருகின்றது. உழவுக்கு உதவி செய்யும் உற்ற நண்பனாக விளங்கும், மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப்பொங்கல் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.

இதனை முன்னிட்டு, கால்நடைகள் நீரில் குளிப்பாட்டப்பட்டு, மாலைகளால் அலங்கரித்து, பொங்கலிட்டு, மாடுகளுக்கு பூஜை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக வாணாதிராஜபுரத்திலும் இந்நிகழ்வு நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த வாணாதிராஜபுரத்தில், கோசாலை (பசுக்கள் காப்பகம்) அமைந்துள்ளது. ஆதரவற்று திரியும் மாடுகள், பால் அற்றுப்போய் அடிமாட்டிற்கு விற்கப்படும் மாடுகள், முதுமையடைந்த மாடுகள் உள்ளிட்ட ஆதரவற்ற மாடுகள் இங்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டுவருகின்றன.

1008 மாடுகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. இங்கு இன்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மாடுகளுக்கு கோபூஜை விழா நடைபெற்றது. மாடுகளை குளிப்பாட்டி நெட்டிமாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் குறைந்த அளவில் வந்திருந்த பொதுமக்கள் மாடுகளுக்குப் பூஜைசெய்து, உணவு அளித்து வழிபாடு நடத்தினர்.

இதையும் படிங்க: Highlights of திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு

Last Updated : Jan 15, 2022, 3:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details