தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புரெவி புயல்: சீர்காழியில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் சரிந்து பாதிப்பு! - sugarcane cultivated on 100 acres in Sirkali

நாகை: புரெவி புயல் காரணமாக, சீர்காழியில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் கீழே சாய்ந்ததால், பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரும்பு
கரும்பு

By

Published : Dec 10, 2020, 10:08 PM IST

வங்கக் கடலில் உருவான புரெவி புயலின் காரணமாக கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த தொடர் மழை, சீர்காழி தாலுகாவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, சீர்காழி அருகே அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, காத்திருப்பு உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பொங்கல் கரும்பு, மழையின் காரணமாக கீழே சாய்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கீழே சாய்ந்த கரும்புகளை மேலே நிமிர்த்தி கட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு நிமிர்த்தும் போது கரும்புகள் உடைந்து சேதமடைகின்றன. கரும்புகளை மேலே நிமிர்த்தி கட்டுவதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 வரை செலவாவதாகவும், இது பயிரிடும் செலவை விட கூடுதலாக உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே, வடிகால் வசதி இல்லாமல், கரும்புகளை தண்ணீர் சூழ்ந்து வடிவதற்குவாய்ப்பில்லாமல் கரும்புகள் அழுகும் நிலை உள்ளதால், பாதிக்கப்பட்ட கரும்புகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ரூ.80 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details