தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள் - விவசாயிகள் கவலை - நீரில் மூழ்கி சேதமைடந்த சம்பா பயிர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

d
d

By

Published : Oct 14, 2021, 6:52 PM IST

மயிலாடுதுறை : கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், பாண்டூர், பொன்னூர், மகாராஜபுரம், அருள்மொழிதேவன், கொற்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நடவு செய்துள்ள 15 நாள் சம்பா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது.

திருமங்கலத்திலிருந்து கங்கணம்புத்தூர் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் செல்லும் எல்லை வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், ஆண்டுதோறும் பெருமழைக்காலங்களில் கடும் பாதிப்புக்கு உள்ளாகிவரும் இப்பகுதி விவசாயிகள் சிலர் இந்த ஆண்டு ஒன்றிணைந்து தாங்களே ரூ.1 லட்சம் வரை செலவுசெய்து எல்லை வாய்க்காலை தூர்வாரி உள்ளனர்.

விவசாயிகள் வேதனை

இருப்பினும், பல்வேறு கிராமங்களில் தூர்வாரப்படாத நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக எல்லை வாய்க்காலை தூர்வாரி, அழுகத் தொடங்கியுள்ள பயிர்களை காப்பாற்றி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓரிரு நாட்கள் தாமதித்தால்கூட பயிர்களை காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்றும், அரசு இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பத்தாயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழையில் மூழ்கி நாசம் - உழவர்கள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details