தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யக் கூடாது" - பிராமணர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்! - TN Brahmin Association

TN Brahmin Association general meeting held in mayiladuthurai: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 14ஆம் ஆண்டு மாநில பொதுக்குழுக் கூட்டம் நேற்று (டிச.17) மயிலாடுதுறையில் நடைபெற்ற நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பிராமணர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது
பிராமணர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 7:24 AM IST

மயிலாடுதுறை: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 14ஆம் ஆண்டு மாநில பொதுக்குழுக் கூட்டம் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (டிச.17) நடைபெற்றது.

மாநிலத் தலைவர் கணேசன் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சங்கர ராமநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், மாநிலப் பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது, 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

  • கூட்டத்தின் முடிவில், மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்ட எந்த இட ஒதுக்கீட்டிலும் வராத முற்படுத்தப்பட்டுள்ள வகுப்பில், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு என்ற தீர்ப்பைத் தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  • கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிராமணர்களின் முன்னேற்றத்துக்குத் தனி நலவாரியத்தைத் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.
  • டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வில் மற்ற சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு சலுகை போல, முற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் 35 வயதாக உயர்த்த வேண்டும்.
  • பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் பிராமணர் சமுதாயத்தின் சம்பிரதாயங்களையும், இந்து கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுபவர்களை சட்டப்பூர்வமாகத் தண்டிக்க வேண்டும்.
  • அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தக்கார் நியமனத்தில் பிராமணர் சமூகத்தில் உள்ள தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
  • அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நவோதயா பள்ளிகளை உடனடியாக திறக்க வேண்டும்.
  • மத்திய அரசாலும், உச்சநீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டு எல்லா மாநிலத்திலும் சட்டமாக அமல்படுத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டில் எந்த காரணத்துக்காகவும் ரத்து செய்யக் கூடாது.
  • காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்குச் செல்லும் உபரி நீரைத் தஞ்சாவூர், அரியலூர், சிதம்பரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் தடுப்பணை கட்டி சேமிக்க வேண்டும்.
  • மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயிலைக் காரைக்கால் வரை நீட்டித்து மீண்டும் இயக்க வேண்டும்.
  • மயிலாடுதுறை நகரைச் சுற்றிச் செல்லும் பைபாஸ் சாலை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் ஆகிய 10 தீர்மானங்கள் இந்த பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க:தென் மாவட்டங்களில் தொடர் கன மழை.. அரக்கோணத்தில் இருந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை!

ABOUT THE AUTHOR

...view details