மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து சுமார் 300 கிலோ எடையும், 10 அடி நீளமும் கொண்ட ராட்சத முதலை கரையோரம் உள்ள சித்தமல்லி கிராமத்திற்கு வந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், முதலையை கயிறு மூலம் தற்காலிகமாகக் கட்டிவைத்தனர். இது குறித்து காவல் துறைக்கும், வனத் துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
ஆனால், முதலை பிடிப்பட்டது தொடர்பாகத் தகவல் அளித்து நான்கு மணி நேரமாகியும் வனத் துறை வரவில்லை எனக் கூறப்படுகிறது. அங்கு முதலையைப் பார்க்க ஏராளமான மக்கள் ஒன்றுகூடினர். ஆபத்தை உணராத மக்கள், முதலை மீது தண்ணீர் ஊற்றியும் சீண்டிக் கொண்டிருந்தனர். முதலை பிடிப்பட்ட காணொலி சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.