மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் விரிவாக்க கட்டடத்தின் எதிரே இயங்கிவரும் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வரை 111 பேர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று கூடுதலாக யாரும் பாதிக்கப்பட வில்லை என்பதால், அதே எண்ணிக்கையில் தொடர்கிறது. தற்போது வரை மொத்தம் 111 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பலனின்றி இருவர் உயிரிழந்த நிலையில், 54 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். மேலும், 55 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.