மதுரை:தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் ஜாமீனில் வெளிவந்த பிறகு மீண்டும் அவதூறான கருத்துக்களை யூடியூப்பில் பரப்பியதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக ஏற்கனவே வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வழக்கு நீதிபதி புகழேந்தி முன் இன்று(மார்ச் 17) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் ஆஜராகி யூடியூப் தொடர்பான விதிகள், சட்டத்திருத்தங்கள் மற்றும் முழு விவரங்களை நீதிபதி முன் தாக்கல் செய்தார்.