தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியல் தலைவர்களை அவதூறாக சித்தரித்து காணொலி வெளியிட்ட யூ-டியூபருக்குக்கு பிணை - அண்மை செய்திகள்

மதுரை: அரசியல் கட்சித் தலைவர்களை அவதூறாக சித்தரித்து காணொலி வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூ-டியூபர் துரைமுருகனுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

By

Published : Aug 6, 2021, 1:26 PM IST

கடந்த மே மாதம்திருச்சியை சேர்ந்த யூ-டியூபர் துரைமுருகன் என்பவர், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி, பாஜகவில் அங்கம் வகிக்கும் நடிகை குஷ்பு இருவரின் புகைப்படங்களையும் தவறாக சித்தரித்து யூடியூப் தளத்தில் காணொலி பகிர்ந்திருந்தார்.

இது தொடர்பாக திருப்பனந்தாளைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜூன் மாதம் திருப்பனந்தாள் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து துரைமுருகனை கைது செய்தனர். தொடர்ந்து அந்நபர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் துரைமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை கோரி முன்னதாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று (ஆக.08) விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின் முடிவில் மனுதாரருக்கு பிணை வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க:ஆக. 15 பிறக்கும் நள்ளிரவில் பேரவையில் சிறப்பு விழா?

ABOUT THE AUTHOR

...view details