தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: முன்னிலையில் இருந்த வீரர்கள் படுகாயம்..! ஆட்சியர் நேரில் சென்று ஆறுதல் - ஜல்லிக்கட்டு 2024

Avaniyapuram Jallikattu: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முன்னிலையில் இருந்து இரண்டு மாடுபிடி வீரர்கள், மாடு முட்டி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முன்னிலையில் இருந்த வீரர்கள் காயம்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முன்னிலையில் இருந்த வீரர்கள் காயம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 12:23 PM IST

மதுரை:அவனியாபுரத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணி அளவில் துவங்கப்பட்டது. போட்டி துவங்கியது முதல் விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் சீறிப்பாயந்த காளை உரிமையாளர்களுக்கும், காளைகளின் திமிலைப் பிடித்து அடக்கும் வீரர்களுக்கும் பரிசு மழைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

மொத்தம் எட்டு சுற்றுகளாக இருக்கும் இந்த போட்டிகளில் முதல் மூன்று சுற்றுகள் நிறைவு பெற்றுள்ளன. இதில் அதிக காளைகளை அடக்கி, மதுரையைச் சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கு முன்னிலை இருந்து வந்தார். மேலும் இரண்டாம் சுற்றில், 13 காளைகளை அடக்கி முன்னிலையில் இருந்த மாரியப்பன் ரஞ்சித் முன்னிலையில் இருந்தார்.

தற்போது மூன்றாம் சுற்று நடைபெற்று வரும் நிலையில், முதல் இரண்டு சுற்றுகளில் முன்னிலையில் இருந்த மாடுபிடி வீரர்களும் அடுத்தடுத்து காளையால் தாக்கப்பட்டு காயம் அடைந்தனர். இந்நிலையில், களத்தில் இருந்த செஞ்சிலுவை சங்கத்தை சார்ந்த தன்னார்வலர்கள் அவர்களை மீட்டு, அவனியாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது மூன்றாவது சுற்று நடைபெற்று வருகிறது இந்த மூன்றாவது சுற்றில் பங்கேற்று அதிக காலையில் அடக்கிய மாரியப்பன் ரஞ்சித் மற்றும் கார்த்திக் என்கிற மாடுபிடி வீரர்கள் அடுத்தடுத்து காயங்கள் ஏற்பட்டு அவனியாபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளையர்களை சுழற்றி வீசிய திருமாவளவனின் காளை..!

மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தற்போது வரை 9 மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 19 பேர், பார்வையாளர்கள் ஒருவர், காவல்துறை சார்பு ஆய்வாளர் ஒருவர் என மொத்தம் 30 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர். அவர்களுக்கான சிகிச்சைகளும் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், மாடுபிடி வீரர்களான கார்த்திக் மற்றும் மாரியப்பன், ரஞ்சித் ஆகியோரை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் சென்று ஆறுதல் கூறினார். இந்நிலையில், 4வது சுற்றின் நிறைவில் ஒரு மாடுபிடி வீரரும், இரண்டு மாட்டின் உரிமையாளர்களும் காயம் அடைந்துள்ளனர்.

அந்தவகையில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து, இதுவரை காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும், போட்டியின் போது மாடு முட்டி காயம் அடைபவர்களுக்கு உடனடி முதலுதவி சிகிச்சை வழங்க, மருத்துவக்குழுவும், மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்களும் தயாரி நிலையில் உள்ளன.

இதையும் படிங்க:அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: தேனி வீரர் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை!

ABOUT THE AUTHOR

...view details