மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் முஸ்தபா (35). இவர் கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்தநிலையில், ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு கேரளாவிலிருந்து திரும்பிய முஸ்தபா, மதுரை பீபீகுளம் அருகேயுள்ள முல்லைநகரிலுள்ள தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார். இவருக்கு சளி, இருமல், சோர்வு இருந்துவந்துள்ளதால் அவருக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதிய அக்கம்பக்கத்தினர் சுகாதாரத் துறைக்கும், தல்லாகுளம் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
சுகாதாரத் துறையினர் முல்லைநகர் வந்து இவரிடம் விசாரணை நடத்தி முஸ்தபாவையும் அவரது தாயாரையும் அவசர ஊர்தி மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தனர். ஆனால், அவசர ஊர்தி வர தாமதம் ஆனதால் அவர்களை டாடா ஏசி வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.