தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யூ-டியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய பாய்ஸ்...! - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: சமயநல்லூர் அருகே யூ-டியூப்பில் வீடியோ பார்த்து, நண்பர்கள் உதவியுடன் கள்ளச்சாராயம் தயாரித்த ஆறு இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

யூ-டியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய பாய்ஸ்
யூ-டியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய பாய்ஸ்

By

Published : Apr 17, 2020, 1:20 PM IST


மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சோழவந்தான் செல்லும் சாலையில் உள்ள செங்கல் தயாரிக்கும் சூளையின் பின்புறம் உள்ள வைகை ஆற்றங்கரையில் கள்ளச்சாராயம் தயாரிக்க ஊறல்கள் பதுக்கி வைத்திருப்பதாக சமயநல்லூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்கு இளைஞர்கள் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காக பழச்சாறுகளை பிளாஸ்டிக் குடத்தினுள் போடப்பட்டு, அதனை குழி தோண்டி புதைத்து கொண்டிருந்தனர்.

அப்போது, காவல் துறையினரைக் கண்ட இளைஞர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர். அதில் ஆறு பேரை மட்டும் காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். மேலும், நான்கு பேர் தப்பி ஓடினர். பின்னர், ஆறு பேரை சமயநல்லூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் தேனூர் சேம்பர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (25) என்ற இளைஞர் யூ டியூப் வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சி குடிக்கலாம் என்று நண்பர்களிடம் கூறியதால், அதனடிப்படையில் அவரது நண்பர்கள் அசோக் குமாருக்கு உதவியது தெரியவந்தது.

சாராயம் காய்ச்சிய இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர்
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய நான்கு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: டிக்டாக்கில் கள்ளச்சாராயம் காய்ச்சும் காணொலி: தேனி அருகே 4 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details