மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் பொதுகழிப்பறை அருகே 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அப்பகுதி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த காவல் துறையினர் இளைஞரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மதுரை ஆரப்பாளையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை - madurai latest news
மதுரை: ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
madurai-aarappalayam
அதைத்தொடர்ந்து அவர்கள் முதற்கட்டமாக மோப்ப நாய் உதவியுடன் தடயங்களைச் சேகரித்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இக்கொலை சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சிப்ஸ் வாங்கிவிட்டு காசு கொடுக்காததைத் தட்டிக் கேட்டவர் வெட்டிப் படுகொலை!