தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜல்லிக்கட்டு பயிற்சி: மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு - ஜல்லிக்கட்டு காளை

மதுரை: மேலூர் அருகே ஜல்லிக்கட்டு காளை பயிற்சியின் போது காளை முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Jallikattu death
Jallikattu death

By

Published : Oct 11, 2020, 4:13 PM IST

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகாபுரியை சேர்ந்த இளைஞன் ரமேஷ் (23). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், ஜல்லிக்கட்டு போட்டியில் ஆர்வம் உடையவராக இருந்தவர்.

மேலூர் வினோபா காலணி பகுதியில் காளையை வைத்து ஜல்லிகட்டு பயிற்சி அளித்தபோது, அதில் ரமேஷூம் கலந்துகொண்டார்.

அப்போது காளை முட்டியதில் இடுப்பில் குத்துகாயங்கள் ஏற்பட்டதால் ரத்தம் வழிந்து ரமேஷ் சுருண்டு விழுந்தார். அங்கிருந்த இளைஞர்கள் உடனடியாக அவரை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரமேஷ் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேலூர் காவல்துறையினர், இளைஞர் காளை முட்டி உயிரிழந்தது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details