தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமியைத் திருமணம் செய்த நபர் போக்சோவில் கைது - youth arrested in madurai

மதுரை : மேலூரில் சிறுமியைத் திருமணம் செய்த நபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

போக்சோவில் கைது
போக்சோவில் கைது

By

Published : Dec 23, 2020, 8:42 AM IST

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள ஒத்தப்பட்டி கிராமத்தில்,கடந்த 9ஆம் தேதியன்று 17 வயது சிறுமி ஒருவரை, பாலமுருகன் (வயது 31) எனும் நபருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து சமூக நலத்துறை அலுவலர்களுக்கு முன்னதாக தகவல் கிடைத்த நிலையில், தகவலின் அடிப்படையில் சமூக நல அலுவலர்கள் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், சிறுமியைத் திருமணம் செய்த பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர்கைது செய்தனர். மேலூர் மகளிர் காவல் ஆய்வாளர் சாந்தி பாலாஜி இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details