மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சிவனேஸ்வரன் என்ற இளைஞர், இருசக்கர வாகனத்தில் கஞ்சா டோர் டெலிவரி செய்வது தெரியவந்துள்ளது.
பைக்கில் கஞ்சா டோர் டெலிவரி - இளைஞர் கைது - madurai ganja arrest
மதுரை: நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை டோர் டெலிவரி செய்த இளைஞரைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
ganja
இதையடுத்து, சிவனேஸ்வரனை நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் கைதுசெய்தனர். அவரிடமிருந்து 1.4 கிலோ கஞ்சாவும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிவனேஸ்வரனுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.