தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்கள்

மதுரை: 100 விழுக்காடு தேர்தலில் வாக்களிப்பது குறித்து முதல் முறையாக நடனம் மூலம் இளைஞர்கள் விழிப்புணர்வு செய்தனர்.

இளைஞர்கள்

By

Published : Apr 15, 2019, 8:15 AM IST


மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடனமாடி ஒவ்வொன்றையும் கொண்டு சேர்க்கும் வழக்கம் மேலை நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், தேர்தல் துவங்கிய நாள் முதல் 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில், அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மதுரையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய இளைஞர்கள்

இதில் சற்று வித்தியாசமாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் 15 பேர் கொண்ட இளைஞர் குழுவினர், 100 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கென தனியாக ஒரு பாடலையும் உருவாக்கி அந்த பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். இது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.

ABOUT THE AUTHOR

...view details