மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (21). பெயிண்டராக வேலை செய்து வரும் இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையிலிருந்த 11 வயது சிறுமியை, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு குலமங்கலம் பகுதியில் பெற்றோருடன் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர். இதனிடையே வயிற்று வலியால் அவதிபட்ட சிறுமி அருகிலுள்ள குலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார். பிரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருந்ததும், அவருக்கு 11 வயது தான் நிரம்பியது என்று தெரிந்ததும் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.