தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Madurai Allanganallur Jallikattu : உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - அமைச்சர் உதயநிதி துவக்கி வைப்பு!

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

Madurai Allanganallur Jallikattu
Madurai Allanganallur Jallikattu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 7:26 AM IST

மதுரை :உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன. 17) காலை உறுதி மொழியுடன் துவங்கிய நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டிகளை துவங்கி வைத்தார்.

தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையை ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன. 17) காலை 7 மணி அளவில் உறுதிமொழி உடன் துவங்கியது.

மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க வீரர்கள் தொடர்ந்து உறுதி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டியை துவங்கி வைத்தார். வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஒட்டுமொத்தமாக 1,200 காளைகளும், 800 மடுபிடி வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கின்றனர். போட்டியில் ஒட்டுமொத்தமாக 10 சுற்றுகள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களமிறங்குவர். அதில் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்.

மாலை 5 மணி வரை போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை, பித்தளை பாத்திரங்கள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அதிக காளைகளை பிடிக்கும் மாடு பிடி வீரர்களுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. களத்தில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும் அதே போன்று பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது.

காயம் படும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்காக சுகாதாரத் துறை மற்றும் கால்நடை துறை சார்பாக சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. காயம்படும் வீரர்களை மற்றும் காளைகளை மீட்க இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் இதற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அலங்காநல்லூர் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள், 800 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டோக்கன் வெளியிடப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்தவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க :"ஜல்லிக்கட்டு கமிட்டிக்கு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் துணை நிற்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!

ABOUT THE AUTHOR

...view details