தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களுக்கு முகக்கவசம் வழங்கிய மகளிர் சுய உதவிக்குழு - அமைச்சர் ஆர் பி உதயகுமார்

மதுரை: முகக்கவசங்கள், சானிடைசர்கள் உள்ளிட்டவற்றை அரசு அலுவலர்கள், காவல் துறையினர், ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் என பலருக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர் வழங்கினர்.

மக்களுக்கு முகக் கவசம் வழங்கிய மகளிர் சுய உதவிக்குழு
மக்களுக்கு முகக் கவசம் வழங்கிய மகளிர் சுய உதவிக்குழு

By

Published : Apr 9, 2020, 10:04 PM IST

கரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

மக்களுக்கு முகக்கவசம் வழங்கிய மகளிர் சுய உதவிக்குழு

அந்த உத்தரவின் பேரில், வருவாய்த் துறை அதிகாரிகள் மதுரை திருப்பரங்குன்றம் உச்சபட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 450 குடும்பத்தினருக்கு தலா ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.

இந்நிலையில், வருவாய்த் துறை அதிகாரிகளுடன் இணைந்து மதுரை திருமங்கலத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு அரசு நிதியுதவியுடன் அவர்கள் தயாரித்த கை கழுவுவதற்கு உபயோகப்படுத்தப்படும் சானிடைசர்கள், முகக்கவசங்களை 450 குடும்பத்தினருக்கும் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து இந்த முகக்கவசங்கள், சானிடைசர்களை அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கினார்கள். சுய உதவிக்குழுவின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 144 தடை: பாக்கு மட்டை தயாரிப்பு தொழில் முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details