ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் பெண் கல்வி, திருநங்கைகள் ஆவண மையம் சார்பாக 'சிங்கப் பெண்களின் சிம்மாசனம் - சக்திகள் 100' என்ற பெயரில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் நூறு பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக சேவை, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் துறை, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நூறு பெண்கள் இவ்விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.