உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் மதுரை மாவட்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தியது. இதில் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உதவி ஆட்சியர் ஜோதி சர்மா இஆப., “பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் சமூகத்திற்காக பங்களிப்பு செய்ய முன்வர வேண்டும். பெண்கள் ஒவ்வொருவரின் முன்வந்த செயல்பாடுதான் இந்த சமூகத்தின் மேன்மையை உறுதி செய்யும். அந்த அடிப்படையில் உலக மகளிர் தினத்தை நாம் கொண்டாடி மகிழ வேண்டும்” என்றார்.