தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகரப் பேருந்தில் இலவச பயணம் - மகிழ்ச்சியில் பெண்கள் - மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை: தமிழ்நாட்டில் சாதாரண மாநகரப் பேருந்துகளில் மகளிர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது எனப் பெண்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மகிழ்ச்சியில் பெண்கள்
மகிழ்ச்சியில் பெண்கள்

By

Published : May 8, 2021, 1:54 PM IST

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று (மே.07) பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த ஐந்து முக்கிய திட்டங்களுக்குக் கையெழுத்திட்டார்.

அதில் ஒன்றாக மாநகரங்களில் உள்ள சாதாரண பேருந்துகளில் மகளிர்கள் அனைவரும் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தார். இந்நிலையில் அத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று (மே.08) முதல் அமலுக்கு வந்தது.

மாநகரப் பேருந்தில் இலவச பயணம்

இதனையடுத்து மதுரை மாநகர பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி இலவசமாகப் பெண்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று எனக் கூறி பெண்கள், முதலமைச்சருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details