மதுரை செல்லூர் வைகை ஆற்றுப்பாலம் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இன்று காலை வந்துள்ளார். திடீரென அவர் தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். பெண்ணின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். எனினும், பெண் முழுமையாக எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மதுரை வைகை ஆற்றுப்பாலத்தின் அருகில் பட்டப்பகலில் பெண் தீக்குளித்து தற்கொலை - மதுரை வைகை ஆற்றில் பட்டப்பகலில் பெண் தீக்குளித்து தற்கொலை
மதுரை: பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள செல்லூர் பகுதி வைகை ஆற்றுப்பாலத்தின் அருகே பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் தற்கொலை
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மதுரை வைகை ஆற்றின் கரையோரம் பட்டப்பகலில் அரங்கேறிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
யார் அந்த பெண்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Sep 23, 2019, 7:34 PM IST