தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகனின் சந்தேக மரணம்? - தாய் கதறல்!

மதுரை: பெண் ஒருவர் தனது மகனின் சந்தேக மரணம் குறித்து நியாயம் வேண்டி மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்

தாய் கதறல்

By

Published : Jul 29, 2019, 4:05 PM IST

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புண்ணியவதி தனது மகன், காடனேரி ஏழுமலை என்ற கல்குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்ததாகவும், கடந்த ஜூலை 2ஆம் தேதி வேலைக்கு சென்ற அவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார் என்று முறையிட்டார்.

மேலும், இது குறித்து குவாரி உரிமையாளர்களிடம் கேட்டபோது தனது மகன் விபத்தில் இறந்துவிட்டதாக கூறினார்கள். ஆனால் தன் மகனை குவாரி உரிமையாளர்கள் படுகொலை செய் திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, கல்குவாரியில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுப்பதை தட்டிக் கேட்டதால் தன் மகன் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் கூறி அழுது புலம்பினார்.

மகனின் சந்தேக மரணம்? - தாய் கதறல்!


இந்நிலையில், அந்த பெண்மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மகனின் சந்தேக மரணம் குறித்து பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகன் இறப்புக்கு நியாயம் வேண்டும். அந்த கல் குவாரியில் முறைகேடான வகையில் கற்கள் வெட்டி எடுத்ததை அரசு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதால்தான் தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆகையால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட வேண்டும்” என்றார்


முன்னதாக, உயிரிழந்தவரின் மனைவி, அவரின் மூன்று குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து அவர் போராட்டம் நடத்தினர். காவல் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகும் போரட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்து விட்டனர்.

இதனிடையே பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர், உறவினர்களோடு போலீஸாருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details