மதுரை மாவட்டம் பெருங்குடி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் முகமது கவுஸ். இவரது மனைவி காத்தூன் பீவி (55). இவர் தனது பூர்வீக இடத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வீடுகட்டி வசித்து வந்துள்ளார். இது தொடர்பாக அவரது சகோதரர்கள், சகோதரிகள் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை உறவினர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதில் காத்தூன் பீவி காயமடைந்தார். பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.