மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விவகாரத்து வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக புதூரை சேர்ந்த தம்பதி நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்நிலையில் தம்பதி இருவரும் சேர்ந்து வாழ சம்மதித்துள்ளனர். அப்போது அந்த தம்பதியை சந்தித்த கன்னியம்மாள் என்ற பெண் தான் வழக்கறிஞர் என கூறி ஏற்கனவே வழக்கு தொடர்ந்த தம்பதியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த தம்பதி், அருகில் இருந்த வழக்கறிஞர்களிடம் அப்பெண்ணை பற்றி புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பான தகவலின் பேரில் மாவட்ட நீதிமன்றத்திற்கு அண்ணாநகர் காவல்துறையினர் சென்றனர்.