மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குண்டாறு நதி செல்கிறது. இப்பகுதியில் நேற்று (ஆக.08) மதியம் துர்நாற்றம் கலந்த புகை குடியிருப்புப் பகுதிக்குள் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் ஆற்றுப்பகுதியில் சென்று பார்த்தபோது, தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர் எரிந்த உடலை ஆய்வு செய்தபோது 70 விழுக்காடு எரிந்த நிலையிலும், வலது கை உடைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடல் என கண்டுபிடித்தனர்.