மதுரை: பெரியார் பேருந்து நிலையத்தில், பணி முடிந்து வீட்டிற்குச் செல்ல, பேருந்துக்காக காத்திருந்த 22 வயது இளம்பெண்ணிடம், குடிபோதையில் வந்த நபர் பாலியல் சீண்டல் செய்து, அங்கிருந்து ஓடியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண், தன்னிடம் தவறாக நடந்தநபரை துரத்திப்பிடித்து, சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனைக்கண்டு பொதுமக்கள் கூடினர். பின்னர் இதனைக்கண்ட காவல் துறையினர், அந்த குடிகாரரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
தவறாக நடந்த நபரை தெறிக்க விட்ட பெண் விசாரணையில், அவர், களிமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற காவல் துறையினர், அப்பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 12 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த அரசு அலுவலர் - நீதிகேட்டு ஆட்சியர் அலுவலகம் ஏறிய பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்!