மதுரையை அடுத்த கோரிப்பாளையம் பகுதியில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “மதுரையின் 6 சட்டப்பேரவை தொகுதியிலும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். கட்சி தலைமை எதை ஒதுக்கினாலும், அதில் நிற்பேன். நான் எதற்கும் தயார்.
அகில இந்திய சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் கூட்டணிக்கு போவார், பின்னர் அவரே வருவார். அவரைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை. நடிகர் என்ற முறையில் கூட கமலை பார்க்க சென்றிருக்கலாம்.
தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அதிமுகவுடன் இணைக்க பாஜக தரப்பில் அழுத்தம் தரப்படவில்லை. அமமுக, அதிமுக இணைப்பு குறித்த விவகாரங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இந்த விவகாரத்தில் தலைமை என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு கட்டுப்படும் தொண்டனாகவே நான் இருக்கிறேன்.
கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக்கடன்களை ரத்துசெய்வது குறித்து இதுவரை அரசாணை வெளியாகவில்லை என்பது உண்மைதான். நகைக்கடன் ரத்து குறித்த அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதற்குள் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. அது எப்படியாவது நடைமுறைப்படுத்தப்படும். நகைக்கடன் ரத்து செய்ததற்கான அரசாணை குறித்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய பின்னர் வெளியாகும்” என்றார்.
இதையும் படிங்க :இரண்டே நாளில் ரூ.25,83,000 பறிமுதல்