மதுரை:அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பாக ரூபாய் 85 லட்சம் மதிப்பிலான ஆயிரம் வயர்லெஸ் சென்சார் கருவிகள், அதற்கான கட்டமைப்புகளை தமிழ்நாடு நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (செப்.25) தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல், தனியார் நிறுவன இயக்குநர் ஹரி சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த வயர்லெஸ் கருவியின் மூலம், அதிகமான நோயாளிகளின் இதய இயக்கத்தை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும்.
நோயாளிகளின் இதய பகுதியில் ஸ்டிக்கர் போன்ற அமைப்பில் உள்ள இந்த சென்சாரை ஒட்டினால் போதும். ஆறு நாள்களுக்கு அவர்களது அருகில் செல்லாமலேயே அவர்களை முழுமையாக கண்காணிக்க முடியும். கருவியின் சென்சார் சிக்னல் மூலம் நர்சிங் ஸ்டேஷனில் உள்ள பெரிய திரையில் ஒவ்வொரு நோயாளிகளின் இதய இயக்கத்தினைக் கண்காணிக்கலாம்.