ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசுக் கப்பல் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2500-க்கும் மேற்பட்ட பயணிகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். குறிப்பாக அங்கு இருக்கும் 162 இந்தியர்களில், 5 பேர் தமிழர்கள் ஆவர். அதில் மதுரையைச் சேர்ந்த அன்பழகன் என்பவரும், அக்கப்பலில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களில் இருவருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தனது கணவரை உடனடியாக அங்கிருந்து, இந்திய அரசு மீட்டுக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினய்யிடம் அன்பழகனின் மனைவி மல்லிகா இன்று மனு அளித்தார்.