தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காங்கேயம் பசுவை பரிசாகக் கொடுப்பதன் பின்னணி: ஜல்லிக்கட்டு ஆர்வலர் பகிர்வு - ஜல்லிக்கட்டு ஆர்வலர் பகிர்வு

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு காங்கேயம் பசு, கிடாரி கன்று ஆகியவை பரிசாக வழங்கப்பட உள்ளன. இதன் பின்னணி குறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர் பொன்.குமார் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Kangayam cattle
காங்கேயம் பசு

By

Published : Jan 15, 2021, 10:17 AM IST

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கி இரண்டாம் சுற்று நடைபெற்று வருகிறது. திமிறி ஓடும் காளைகளின் திமிலைப் பற்றி அடக்கி வெற்றி காணும் மாடுபிடி வீரர்களுக்குப் பல்வேறு பரிசுகளை விழா கமிட்டி அறிவித்துள்ளது.

காங்கேயம் பசு பரிசு:

சிறந்த முறையில் விளையாடும் காளைகளுக்கு காங்கேயம் பசு, கிடாரி கன்று (ஈனாத இளம்பசு) ஆகியவை பரிசாக வழங்கப்பட உள்ளன. இந்தப் பரிசை வழங்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆர்வலர் பொன்.குமாரிடம் கேட்டபோது, 'நாட்டு மாட்டு இனங்களை ஊக்குவிக்கவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தப் பரிசை வழங்குகிறேன். பாலமேடு ஜல்லிக்கட்டில் வெல்லும் காளைக்கு ஒவ்வொரு ஆண்டும் காங்கேயம் பசு மற்றும் கிடாரி கன்றினைப் பரிசாக வழங்குவது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

காங்கேயம் பசு

அந்த நம்பிக்கையில் இந்தாண்டும் பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுகின்ற சிறந்த காலைக்கு காங்கேயம் பசு, கிடாரி கன்று வழங்கவுள்ளேன். ஜல்லிக்கட்டுப் போராட்டம் மூலமாக எவ்வாறு அதன் உரிமை காக்கப்பட்டதோ... அதே போன்று நாட்டு மாட்டு இனங்களை காப்பது தான் நம் கடமையாகும்' என்றார்.

இதையும் படிங்க:தமிழரும் ஜல்லிக்கட்டும்- வீரம் செறிந்த காதல் கதை!

ABOUT THE AUTHOR

...view details