தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாட்டை துண்டாட நினைக்கும் காங்கிரஸுக்கு ஆதரவாக திமுக செயல்படுவது ஏன்?' - Why DMK support Congress that is trying to dismantle the country

மதுரை: நாட்டை துண்டாட நினைக்கும் காங்கிரஸுக்கு ஆதரவாக திமுக ஏன் செயல்படுகிறது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கேள்வியெழுப்பியுள்ளார்.

Why DMK support Congress that is trying to dismantle the country
Why DMK support Congress that is trying to dismantle the country

By

Published : Jan 9, 2020, 11:31 PM IST

மதுரை செல்லூர் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய அவர், "ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆதரவாக ஏன் திமுக பேசுகிறது. தேசத்தைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கு எதிராக திமுக கல்லெறியும் வேலையைச் செய்கிறது.

திமுக தவறான தகவல்களைப் பரப்பி மக்களை திசை திருப்புகிறது, காங்கிரஸோடு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கக் கூடாது என்ற அரசாணையை வெளியிட்டது. அப்போது கூட்டணியிலிருந்த திமுக ஏன் காங்கிரஸை எதிர்த்து கேள்வி எழுப்பவில்லை.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி பேச்சு

பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என வாஜ்பாய் ஆட்சியில் ஆதரவளித்த திமுக தற்போது ஏன் எதிர்க்கிறது. திமுகவிற்கு இந்துக்களையும், காங்கிரஸுக்கு சீக்கியர்களையும் பிடிக்காததால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். நாட்டை துண்டாட நினைக்கும் காங்கிரஸுக்கு ஆதரவகாக திமுக செயல்படுவது ஏன்?.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி மகாத்மா காந்தியின் ஆசையை நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. எனவே அச்சட்டத்திற்கு தமிழ்நாடு மக்களாகிய நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: ஆங்கிலோ இந்தியன் நியமன எம்எல்ஏ முறை இனி இல்லை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details