தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எப்போது ஒழியும் இந்த பேனர் கலாசாரம்? - அச்சகத்திற்கு சீல்

மதுரை : திருமங்கலத்தில் விதியை மீறி அமைக்கப்பட்டுள்ள பேனர்களால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர்.

திருமங்கலத்தில் இடைவெளியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.

By

Published : Sep 14, 2019, 9:00 PM IST

மதுரை, திருமங்கலத்தில் உள்ள பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம், அரசு பயணிகள் மாளிகை உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் 10க்கும் மேற்பட்ட அதிமுக பேனர்கள் இடைவெளி இன்றியும், கடைகளுக்கு முன்பும், சில பேனர்கள் அறுந்து சாலையில் விழும் நிலையிலும் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ளன.

திருமங்கலத்தில் இடைவெளியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள்.

சமீபத்தில் சென்னையில் சுபஸ்ரீ மரணத்திற்கு பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள்தான் காரணமாக இருந்தது குறித்து நீதிமன்றம் பல்வேறு கேள்விகள் எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பேனர் கலாசாரத்தை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர். இதனால், பெரும்பாலும் அரசியல் நிகழ்ச்சியில் பேனர்கள் வைக்கக் கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும், அதிமுக தலைமையில் இருந்து மக்களுக்கு இடையூறாக இருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என்றும், கட்சி நிகழ்ச்சிகளில் பேனர்களை தவிர்க்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, அரசியல் நிகழிச்சிகள் நடைபெறுவதை விளம்பரம் செய்வதற்காக ஒரே ஒரு பேனர் மட்டும் வைத்தால் போதுமானது என்று கூறியுள்ளார். இருந்தபோதிலும் பேனர் கலாசாரத்தை முழுமையாக ஒழிக்க அதிமுக தயாராக இல்லை என்பது தெரியவருகிறது.

சுபஸ்ரீ-யின் மீது விழுந்த பேனரை அச்சிட்ட அச்சகத்திற்கு சீல் வைக்க தயாராக உள்ள தமிழ்நாடு அரசு, பேனர் வைப்பதை குறைக்க ஏன் தயாராக இல்லை? எப்போதுதான் ஒழியும் இந்த பேனர் கலாசாரம்? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details