மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றுவருவதால், அங்கு காலி செய்யப்பட்ட பெட்டிக்கடைகளின் உரிமையாளர்களில் சிலர் தற்காலிகமாக எல்லீஸ் நகர் பேருந்துநிலையம் முன்பு கடைகளை அமைத்துள்ளனர். அதனால் ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை எல்லீஸ் நகர் பேருந்து நிலையம் முன்பு நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளால் இடையூறு ஏற்படுவதால் அவற்றை அகற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு கடந்தாண்டு பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, எல்லீஸ் நகர் பேருந்து நிலையம் முன்பு கடைகளை அமைப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே அந்தத் தடையை நீக்கக்கோரி மதுரை பெரியார் பேருந்து நிலைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தலைவர் ஆர்.வி. ராஜாராம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாற்றிடத்தில்தான் கடை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முறையாக வாடகை செலுத்திவருகிறோம். மேலும் இக்கடைகளால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.