மதுரை:கோடைகால விடுமுறை கூட்ட நெரிசலைத் தவிர்க்க, தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (06030) ஏப்ரல் 21 முதல் ஜூன் 30 வரை வியாழக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சேவை (06029) சிறப்பு ரயில் ஏப்ரல் 22 முதல் ஜூலை 1 வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்திலிருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.