சில தளர்வுகளுடன் ஊரடங்கை மே 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது. இதைத் தொடர்ந்து திருமணங்கள், சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றில் குறைந்த அளவே மக்கள் கூடவேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியது. இதனால், பல்வேறு திருமணங்கள் வேறு தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டன.
வழக்கமாக வைகாசி மாதங்களில் திருப்பரங்குன்றம் கோயிலில் 300க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். அதுவும் வைகாசி வளர்பிறை முகூர்த்தம் சிறப்பு வாய்ந்தது என்பதால் அந்த நாள்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். தற்போதைய ஊரடங்கால், கோயில் மூடப்பட்டிருப்பதால், கோயில் வாசலில் சில திருமணங்கள் ஆரவாரமின்றி நடைபெறுகின்றன.
இன்று 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் நடைபெற்றன. முகக் கவசங்கள் அணிந்தும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும் மணமக்களை அவர்களது உறவினர்கள் வாழ்த்தினர்.