தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது- உயர் நீதிமன்றம் - latest madurai news

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணையின்போது அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அவ்வழக்கினை தள்ளுபடி செய்தது.

we-dont-interfere-in-govt-policy-says-mhc
அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது- உயர் நீதிமன்றம்

By

Published : Jul 17, 2021, 9:12 AM IST

மதுரை:மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கோபிநாத் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முதன்மைச் செயலர் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அரசாணை எண் 29-ஐ பிறப்பித்தார்.

அதன்படி ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஓய்வு பெறும் வயது 59ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது எவ்விதத் தேவையும் இன்றி 60ஆக ஓய்வு பெறும் வயதை உயர்த்தியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்றவற்றால் தமிழ்நாடு இளைஞர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளுவார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:'அவதூறு வழக்கில் ஹெச். ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியதா?'

ABOUT THE AUTHOR

...view details