மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், வருகின்ற 18ஆம் தேதி 'தமிழ்நாட்டை மீட்போம்' என்ற அரசியல் மாநாடு நடக்கவுள்ளது. மத்திய அரசின் இசைவு அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மாநாட்டை முன்னெடுக்கிறோம்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 18 பேர் உயிரிழந்து வருத்தமளிக்கிறது. பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் குறித்து கண்காணித்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி போதுமானது அல்ல. உயிரிழந்தவர்களுக்கு தலா 1கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும். அரசின் நிதியை பயன்படுத்தி பல கோடி ரூபாயை விளம்பரத்திற்கு பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்திற்கு புகாரளித்த நிலையில் பதில் வரவில்லை.