தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் பாதுகாப்பு குழுவில் நாட்டின நாய்களும் இடம் பெற திட்டம்..! - நாட்டின நாய்கள்

பிரதமர் பாதுகாப்பு குழுவில் நம் பாரம்பரிய நாட்டின நாய்களையும் பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக கால்நடைப் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பாதுகாப்பு குழுவில் நாட்டின நாய்களும் இடம் பெற திட்டம்..!
பிரதமர் பாதுகாப்பு குழுவில் நாட்டின நாய்களும் இடம் பெற திட்டம்..!

By

Published : Aug 27, 2022, 10:18 PM IST

மதுரை: அயல்நாட்டு இனங்களுக்கு இணையாக நாட்டின நாய்களுக்கும் மோப்ப சக்தி இருப்பது தற்போது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர், முதல்வர் பாதுகாப்பு குழு மற்றும் விமான, ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நாட்டின நாய்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என கால்நடை பல்கழைக்கழக துணை வேந்தர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தேனி கால்நடை மருத்துவக்கல்லூரி சார்பில் "தேசிய அளவிலான நாட்டின நாய்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்" மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்று(ஆக.27) நடைபெற்றது. வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வக்குமார், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்று இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

பிரதமர் பாதுகாப்பு குழுவில் நாட்டின நாய்களும் இடம் பெற திட்டம்..!

இந்த கண்காட்சியில் திருச்சி, கன்னியாகுமரி, தஞ்சை, காரைக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 270 நாய்களை அவைகளின் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். கண்காட்சியில் பங்கேற்ற சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி, ராஜபாளையம், கட்டக்கால் உள்ளிட்ட பல்வேறு நாட்டின நாய்களுக்கு 'குட்டி இளம் பருவம்' மற்றும் 'வளர்ந்த நாய்கள்' எனும் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பைகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நாய்களுக்கு பரிசு கேடயங்களும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

இதனையடுத்து, கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வக்குமார் அளித்த பேட்டியில், "நாட்டின நாய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்திய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜபாளையம், சிப்பிப்பாறை ஆகிய இனங்கள் மட்டுமே தற்போது நாட்டின நாய்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளன. கோம்பை, கன்னி ஆகியவற்றுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அயல்நாட்டு இனங்களுக்கு இணையாக நாட்டின நாய்களுக்கும் மோப்ப சக்தி இருப்பது தற்போது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனால் பிரதமர், முதல்லர் பாதுகாப்பு குழு மற்றும் விமான, ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நாட்டின நாய்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.

லாப நோக்கத்தில் நாட்டின நாய்களை அணுகக் கூடாது. அவற்றை வளர்ப்பதில் மனிதர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. மன அழுத்தம் உள்ளிட்ட பல நோய்களுக்கு நாய்களால் தீர்வு கிடைக்கின்றன. எனவே லாப நோக்கத்தில் இல்லாமல் மன மகிழ்வுக்காக நாட்டின நாய்களை வளர்க்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: வயிற்றில் கருவுடன் இருந்த நாய் கொலை.. சர்வதேச நாய்கள் தினத்தில் கொடூரம்..

ABOUT THE AUTHOR

...view details