ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா மூலம் உலகளாவிய போரை சந்தித்து வருகிறோம்' - ரவீந்திரநாத் குமார் எம்பி - கரோனா செய்திகள்

மதுரை: கரோனா வைரஸ் மூலம் உலகளாவிய போரை சந்தித்து வருகிறோம் என ரவீந்திரநாத் குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.

-ravindranath-kumar-mp
-ravindranath-kumar-mp
author img

By

Published : Apr 22, 2020, 8:25 PM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதையடுத்து இருவரும் மாவட்ட ஆட்சியர் அறையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதில், மதுரை அரசு ராசாசி மருத்துவமனை முதல்வர் சங்குமணி, சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் பெரிய புள்ளான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரவீந்திரநாத் குமார் எம்.பி. பேசிய போது

முன்னதாக, கரோனா கட்டுப்பாட்டு அறையில் பேசிய ரவீந்திரநாத் குமார், "கரோனா அவசரகால கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் அனைவருக்கும் எனது நன்றிகள். கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தற்போது உலகளாவிய போரை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அதற்காக பாதுகாப்பு பணியில் உள்ள அனைவருமே போர் படை வீரர்கள் போலத்தான். இந்த கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நாம் நிச்சயம் வெற்றி பெருவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரூரில் பத்திரிக்கையாளர்களுக்கு கரோனா பரிசோதனை - அமைச்சர் நேரில் பார்வை

ABOUT THE AUTHOR

...view details