மதுரை மாநகராட்சி பகுதிகளில் மீன் வளர்ப்பு, குத்தகை விடுவது குறித்து முடிவெடுக்க குழு அமைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள நீர் நிலைகளில் மீன் வளர்ப்பு குத்தகை அனுமதிக்க கூடாது என்றும், இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிடக் கோரி பல மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
நீர் நிலைகளே நாட்டிற்கு முக்கியம் - நீதிபதிகள் கருத்து! - Madurai branch of the High Court
மதுரை: நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும், நிலத்தடி நீரை பாதுகாத்து, குடிநீர் தேவையை போக்கத்தான் முக்கியத்துவம் தர வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நீர் நிலைகளே நாட்டிற்கு முக்கியம்
இந்த மனுக்களை நேற்று (பிப்.18) விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், "நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நிலத்தடி நீரை பாதுகாத்து, குடிநீர் தேவையைப் போக்கத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்.