கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்னைகள் தலைவிரித்து ஆட தொடங்கியுள்ளன. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76ஆவது வார்டு பழங்காநத்தம் நேதாஜி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கில் தலைதூக்கும் தண்ணீர் பிரச்னை! - நேதாஜி நகர்
மதுரை: பழங்காநத்தம் நேதாஜி நகர் பகுதியில் கடந்த சில நாள்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக செய்து தரப்படும் எனவும் அக்குறிப்பிட்ட பகுதியில் நான்கு புதிய தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்படும் எனவும் மாநகராட்சியினர் உறுதியளித்தனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் உடனடியாக மாநகராட்சி லாரி மூலமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையும் பார்க்க: பறிக்கப்படாமல் செடியிலேயே பழுத்து வீணாகும் பச்சை மிளகாய்.!