தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உறவினர்கள் மறுத்ததால் இறுதிச் சடங்கை செய்த தன்னார்வலர்கள்

மதுரை: உடல் நலக்குறைவால் இறந்த முதியவருக்கு உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்ய மறுத்ததால் தன்னார்வலர்கள் முன்வந்து செய்துகொடுத்தனர்.

இறுதிச் சடங்கை செய்த தன்னார்வலர்கள்
இறுதிச் சடங்கை செய்த தன்னார்வலர்கள்

By

Published : May 2, 2020, 12:03 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக மதுரையில் பல்வேறு பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு காவல் துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக செல்லூர் உள்ளது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உறவினர்கள் மறுத்ததால் இறுதிச் சடங்கை செய்த தன்னார்வலர்கள்

இறந்த தனது கணவரின் உடலை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மனைவி விடுத்த வேண்டுகோளை ஏற்று மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு செல்லூர் பகுதிக்கு அவர் உடல் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இறந்தவரின் முகத்தை ஆம்புலன்ஸில் இருந்தபடி பார்வையிட ஒலிபெருக்கி மூலமாக உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இந்நிலையில் இறந்தவரின் மனைவி மட்டுமே வெளியே வந்தார். தத்தனேரி சுடுகாட்டிற்கு முதியவரின் மனைவியை அழைத்துச் சென்று தன்னார்வலர்களே இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

இதையும் படிங்க: முதியோர் இல்லத்தில் மூதாட்டிக்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details