விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "வத்திராயிருப்பு ராமசாமியாபுரம் ஊராட்சியில் நொண்டி விருசு ஓடையில், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.
ஆனால், தரமற்ற பொருள்களைக் கொண்டு தடுப்புச் சுவரைக் கட்டியதால் மூன்று மாதத்தில் முழுவதுமாக சேதமடைந்து, பயனற்ற நிலையில் காணப்படுகிறது. சேதமடைந்த தடுப்புச் சுவரை ஆய்வு செய்தபோது, அரசின் விதிகளின் படி தரமான பொருள்களைக் கொண்டு கட்டாமல், பிளாஸ்டிக் பைகளில் மணலை நிரப்பி தடுப்புச் சுவரின் உள்பகுதியில் வைத்துக் கட்டியது தெரிய வந்துள்ளது. ஆகவே, வத்திராயிருப்பு நொண்டி விருசு ஓடையில் தடுப்புச் சுவர் கட்டியதில் ஊழல் செய்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.